மகளிர் உரிமைத் தொகை: அக்டோபர் 15-ல் வரவு? தீபாவளியை முன்னிட்டு நவம்பரில் முன்கூட்டியே கிடைக்க வாய்ப்பு!

தமிழக அரசின் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ், தகுதியுள்ள பெண்களின் வங்கிக் கணக்கில் மாதந்தோறும் ₹1,000 வரவு வைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், அக்டோபர் மாதத்திற்கான உரிமைத் தொகை வரும் அக்டோபர் 15ஆம் தேதி பயனாளிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே, நவம்பர் 8ஆம் தேதி தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்பட உள்ளதால், நவம்பர் மாதத்திற்கான மகளிர் உரிமைத் தொகையை முன்கூட்டியே வழங்க அரசு திட்டமிடலாம் எனக் கூறப்படுகிறது. அதன்படி, நவம்பர் முதல் வாரத்திலேயே தொகை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இருப்பினும், அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களுக்கான தொகை வரவு வைக்கப்படும் தேதி குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. இதுதொடர்பான அரசின் அறிவிப்பை பயனாளிகள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.




கருத்துகள் (0)