கேஸ் சிலிண்டர் ரப்பர் டியூபை எத்தனை மாதங்களுக்கு ஒருமுறை மாற்ற வேண்டும் தெரியுமா?

வீடுகளில் சமையலுக்கு பயன்படுத்தப்படும் கேஸ் சிலிண்டர் ரப்பர் டியூபை குறிப்பிட்ட கால இடைவெளியில் மாற்றுவது மிகவும் அவசியம். கேஸ் நிறுவனங்களின் அறிவுறுத்தலின்படி, ரப்பர் டியூபுக்கு பொதுவாக 18 முதல் 24 மாதங்கள் வரை பயன்பாட்டு காலம் இருக்கலாம். டியூப் வெளிப்புறத்தில் நல்ல நிலையில் இருப்பது போல் தெரிந்தாலும், அதன் காலக்கெடு முடிந்தவுடன் புதிய டியூபாக மாற்றுவது பாதுகாப்பானது.
பழைய டியூப்களில் விரிசல், தேய்மானம் அல்லது சேதம் ஏற்பட்டு கேஸ் கசிவு உண்டாகலாம். இதனால் தீ விபத்து உள்ளிட்ட ஆபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, ISI தரச்சான்று பெற்ற கேஸ் டியூப்களை மட்டுமே வாங்கிப் பயன்படுத்த வேண்டும்.
டியூபில் மடிப்புகள், கீறல்கள், விரிசல்கள் அல்லது சேதங்கள் உள்ளதா என்பதை அவ்வப்போது பரிசோதிக்க வேண்டும். சமையல் முடிந்ததும் கேஸ் ரெகுலேட்டரை அணைத்து வைக்கும் பழக்கத்தையும் கடைப்பிடிக்க வேண்டும். இந்த எளிய பாதுகாப்பு நடவடிக்கைகள் கேஸ் கசிவு மற்றும் விபத்துகளைத் தவிர்க்க உதவும்.




கருத்துகள் (0)