மகளிர் உரிமைத்தொகை எப்போது வரவு? நவம்பர் 15-ல் வங்கிக் கணக்கில் ரூ.1,000!

தமிழகத்தில் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் பயன்பெறும் பெண்களுக்கு, நவம்பர் 15ஆம் தேதி ரூ.1,000 அவர்களது வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்காக பயனாளிகள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.
முன்னதாக தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மகளிர் உரிமைத்தொகை முன்கூட்டியே வழங்கப்படும் என்றும், ரூ.1,000 வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என்றும் தகவல்கள் பரவின. ஆனால், இதுபோன்ற தகவல்களை நம்ப வேண்டாம் என அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டதுடன், பரவும் செய்திகளை வதந்திகளாகக் கருதுமாறும் அறிவுறுத்தப்பட்டது.
இந்தச் சூழலில், வழக்கமான மாதாந்திர உரிமைத்தொகை வரும் நவம்பர் 15ஆம் தேதி பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என தற்போது தகவல்கள் தெரிவிக்கின்றன.




கருத்துகள் (0)