சிக்கனை சமைப்பதற்கு முன்பு சுத்தம் செய்யும்போது தவிர்க்க வேண்டிய தவறுகள்!

அசைவ உணவு வகைகளில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும் விரும்பி சாப்பிடுவது சிக்கன். இதனை சமைப்பதற்கு முன்பு முறையாகக் கையாள்வது உணவுப் பாதுகாப்பில் முக்கியப் பங்கு வகிக்கிறது. பொதுவாக பலர் சிக்கனை உப்பு மற்றும் மஞ்சள் தூள் கலந்த வெதுவெதுப்பான நீரில் கழுவுவதை வழக்கமாகப் பின்பற்றி வருகின்றனர்.
சிக்கனைச் சுத்தம் செய்யும்போது உப்பு, மஞ்சள் ஆகியவற்றை அதிகமாகப் பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை. குறிப்பாக, உப்பு கலந்த நீரில் நீண்ட நேரம் ஊறவைத்தால் இறைச்சியின் சுவை மற்றும் தன்மையில் மாற்றம் ஏற்படலாம். எனவே, தேவையான அளவில் மட்டுமே இவற்றைப் பயன்படுத்துவது நல்லது.
அதேநேரத்தில், உப்பு மற்றும் மஞ்சள் கலந்த நீரில் கழுவுவது சிக்கனில் உள்ள நோய்க்கிருமிகளை முழுமையாக அழித்துவிடாது. பச்சை சிக்கனை நீரில் கழுவும்போது தண்ணீரின் துளிகள் மூலம் கிருமிகள் சமையலறையின் மற்ற பகுதிகளுக்கும் பரவ வாய்ப்புள்ளது. எனவே, சிக்கனைப் பாதுகாப்பாகச் சமைக்க போதுமான வெப்பத்தில் முழுமையாக வேகவைக்க வேண்டும். பச்சை இறைச்சியைத் தொட்ட பாத்திரங்கள், கத்தி மற்றும் கைகளை நன்றாகச் சுத்தம் செய்வதும் அவசியம்.




கருத்துகள் (0)