தூத்துக்குடியில் போக்சோ வழக்கில் கைதான 50 வயது நபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது!

தூத்துக்குடி தாளமுத்துநகர் வெல்கம்நகர் பகுதியைச் சேர்ந்த சிவபெருமாளின் மகன் ராஜ் (50) என்பவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் ஏற்கனவே வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், அவர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் அளித்த பரிந்துரையைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் விஷூ மகாஜன் இதற்கான உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
இதையடுத்து, குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதற்கான உத்தரவு நகல் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராஜிடம் வழங்கப்பட்டது.




கருத்துகள் (0)