வியாழன், நவம்பர் 19, 2026
உண்மையின் குரல்
அரசியல்

சோத்துப்பாறை அணையை தன்னிச்சையாக திறந்ததாக தவெகவினர் மீது புகார்.. தங்கம் தென்னரசு கண்டனம்!

சோத்துப்பாறை அணையை தன்னிச்சையாக திறந்ததாக தவெகவினர் மீது புகார்.. தங்கம் தென்னரசு கண்டனம்!

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே அமைந்துள்ள சோத்துப்பாறை அணை, நீர்வளத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்காமல் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளால் தன்னிச்சையாக திறக்கப்பட்டதாக வெளியான தகவல் அதிர்ச்சியளிப்பதாக திமுக முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக அவர் தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டு தனது எதிர்ப்பைத் தெரிவித்துள்ளார்.

 

அந்தப் பதிவில், அணையைத் திறப்பது என்பது முறையான நிர்வாக நடைமுறைகளின்படியும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் அனுமதியுடனும் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கை எனக் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக, அணையின் நீர் திறப்பு குறித்து கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கும் விவசாயிகளுக்கும் முன்கூட்டியே தகவல் தெரிவிப்பது அவசியமானது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் அணையைத் திறப்பதால் கரையோர மக்களின் பாதுகாப்புக்கும் விவசாயிகளுக்கும் பாதிப்புகள் ஏற்படக்கூடும் என்பதை சம்பந்தப்பட்டவர்கள் உணரவில்லையா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். அணை திறப்பு தொடர்பான நடவடிக்கைகளில் பாதுகாப்பு நடைமுறைகளையும் உரிய நிர்வாக அனுமதிகளையும் பின்பற்ற வேண்டியதன் அவசியத்தையும் தனது பதிவில் வலியுறுத்தியுள்ளார்.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.