கள்ளக்குறிச்சி தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் வரும்.. தமிழிசை சௌந்தரராஜன் பரபரப்பு பேச்சு!

கள்ளக்குறிச்சி சட்டமன்றத் தொகுதியில் விரைவில் இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளதாக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். கள்ளக்குறிச்சியில் நடைபெற்று வரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றுப் பேசிய அவர், தமிழக வெற்றிக் கழகத்தின் கள்ளக்குறிச்சி தொகுதி எம்எல்ஏ அருள்விக்னேஷ் தொடர்பான புகாரை முன்வைத்து இந்தக் கருத்தை தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு ஆபாசமான குறுஞ்செய்தி அனுப்பியதாகக் கூறப்படும் விவகாரத்தில், எம்எல்ஏ அருள்விக்னேஷ் மீது தேசிய மகளிர் ஆணையம் நிச்சயமாக நடவடிக்கை எடுக்கும் என்று அவர் குறிப்பிட்டார். இந்த விவகாரம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்த தமிழிசை, கள்ளக்குறிச்சி சட்டமன்றத் தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் வருவது உறுதி என்றும் தனது உரையில் கூறினார்.




கருத்துகள் (0)