புதன், நவம்பர் 18, 2026
உண்மையின் குரல்
உலகம்

GTA 6 விளையாட காதலனுக்கு 4 நிபந்தனைகள் விதித்த காதலி!

GTA 6 விளையாட காதலனுக்கு 4 நிபந்தனைகள் விதித்த காதலி!

தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த வனேசா என்ற பெண், தனது காதலன் லாங்காவுக்கு மிகவும் எதிர்பார்க்கப்படும் GTA 6 வீடியோ கேமைப் பரிசாக அளித்துள்ளார். ஆனால், அந்த விளையாட்டை விளையாடுவதற்கு முன்பாக நான்கு நிபந்தனைகள் அடங்கிய ஒப்பந்தம் ஒன்றையும் அவரிடம் வழங்கியுள்ளார்.

 

அந்த நிபந்தனைகளின்படி, லாங்கா சில மணி நேரங்களுக்கு ஒருமுறை தனது காதலியுடன் பேச வேண்டும். வனேசா பேசத் தொடங்கும்போது கேம் விளையாடுவதை நிறுத்திவிட்டு அவருக்கு கவனம் செலுத்த வேண்டும். மேலும், தனது நேரத்தில் பாதிக்கும் மேற்பட்டதை வீடியோ கேம் விளையாடுவதற்காகச் செலவிடக் கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது.

 

இதோடு, விளையாட்டில் இடம்பெறும் லூசியா கதாபாத்திரம் தனது உண்மையான காதலி அல்ல என்பதை எப்போதும் நினைவில் வைத்திருக்க வேண்டும் என்றும் ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் கேமைப் பரிசாகக் கொடுத்தாலும், காதலனின் நேரத்திலும் கவனத்திலும் தனக்கான இடம் இருக்க வேண்டும் என்பதை வனேசா இந்த நிபந்தனைகள் மூலம் வலியுறுத்தியுள்ளார்.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.