ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் அதிரடி.. லஷ்கர் கமாண்டர் லத்தீப் பட் சுட்டுக்கொலை!

ஜம்மு-காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தேடுதல் வேட்டையின்போது, லஷ்கர் அமைப்பைச் சேர்ந்த முக்கிய கமாண்டர் லத்தீப் பட் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். பல்வேறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவங்களுடன் அவருக்குத் தொடர்பு இருப்பதாகப் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அப்பகுதியில் பயங்கரவாதிகள் நடமாடுவதாகப் பாதுகாப்புப் படையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில், சம்பந்தப்பட்ட பகுதிக்குச் சென்ற படையினர் அந்த இடத்தைச் சுற்றிவளைத்து தீவிர தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர். அப்போது பாதுகாப்புப் படையினருக்கும் அங்கிருந்த பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த மோதலின்போது லஷ்கர் கமாண்டர் லத்தீப் பட் சுட்டுக்கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பல்வேறு தாக்குதல் சம்பவங்களில் தொடர்புடையதாகக் கருதப்படும் முக்கிய நபர் இந்த நடவடிக்கையில் உயிரிழந்துள்ளதால், அப்பகுதியில் பாதுகாப்புப் படையினரின் தேடுதல் நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.




கருத்துகள் (0)