புதன், நவம்பர் 18, 2026
உண்மையின் குரல்
உலகம்

காங்கோவில் எபோலா பாதிப்பு அதிகரிப்பு: 6 மாதங்களில் 5,500 பேர் உயிரிழப்பு; உலக நாடுகள் கவலை!

காங்கோவில் எபோலா பாதிப்பு அதிகரிப்பு: 6 மாதங்களில் 5,500 பேர் உயிரிழப்பு; உலக நாடுகள் கவலை!

ஆப்பிரிக்க நாடான காங்கோவில் எபோலா வைரஸ் தொற்று வேகமாகப் பரவி வருவது சர்வதேச அளவில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 6 மாதங்களில் மட்டும் சுமார் 11 ஆயிரம் பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், 5,500 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

கடந்த 2018 முதல் 2020 வரையிலான காலகட்டத்தில் பதிவான பாதிப்புகளையும் விஞ்சும் வகையில் தற்போதைய தொற்று பரவல் அமைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து உலக சுகாதார அமைப்பு அவசரநிலையை அறிவித்துள்ளது.

 

மேலும், காங்கோவைத் தொடர்ந்து கென்யா, உகாண்டா, நைஜீரியா உள்ளிட்ட நாடுகளிலும் எபோலா தொற்று பரவியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. நோய்த்தொற்றின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, காங்கோவுக்கான பயணங்களுக்கு சில நாடுகள் கட்டுப்பாடுகளும் தடைகளும் விதித்துள்ளன. இதனால் எபோலா பரவலைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக உலக நாடுகள் மத்தியில் அச்சமும் கவலையும் அதிகரித்துள்ளது.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.