கணவர் கிருஷ்ண வம்சியை பிரியவில்லை; விவாகரத்து வதந்திக்கு நடிகை ரம்யா கிருஷ்ணன் விளக்கம்!

நடிகை ரம்யா கிருஷ்ணனும் அவரது கணவரும் திரைப்பட இயக்குநருமான கிருஷ்ண வம்சியும் விவாகரத்து செய்துவிட்டதாக சமீபகாலமாக சமூக வலைதளங்களில் பல்வேறு தகவல்கள் பரவி வந்தன. இருவரும் தனித்தனியாக வசித்து வருவதாக வெளியான இந்தத் தகவல்கள் ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தின. இந்நிலையில், இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நடிகை ரம்யா கிருஷ்ணன் விளக்கமளித்துள்ளார்.
இதுகுறித்து பேட்டி ஒன்றில் பேசிய அவர், தங்களுக்குள் எந்தப் பிரிவும் ஏற்படவில்லை என்றும், விவாகரத்து செய்துகொள்ளவில்லை என்றும் தெளிவுபடுத்தியுள்ளார். குடும்பச் சூழல் மற்றும் பணிச் சூழலைக் கருத்தில் கொண்டே இருவரும் வெவ்வேறு நகரங்களில் வசித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
தங்களது மகன் ரித்விக்கின் உடல்நலனை கவனத்தில் கொண்டு, அவருடன் சென்னையில் தங்கியிருந்து பார்த்துக்கொள்ள ரம்யா கிருஷ்ணன் முடிவு செய்துள்ளார். அதேநேரத்தில், திரைப்படப் பணிகள் காரணமாக கிருஷ்ண வம்சி ஹைதராபாத்தில் தங்கி பணியாற்றி வருகிறார்.
இருவரும் இணைந்து ஆலோசித்து எடுத்த முடிவின் அடிப்படையில்தான் வெவ்வேறு நகரங்களில் வசித்து வருவதாகவும் அவர் விளக்கியுள்ளார். இதன் மூலம் தம்பதியினர் பிரிந்துவிட்டதாக சமூக வலைதளங்களில் பரவி வந்த தகவல்கள் உண்மையல்ல என்பது அவரது விளக்கத்தின் மூலம் தெரியவந்துள்ளது.




கருத்துகள் (0)