கான்பூரில் குடும்பத் தகராறு: மைத்துனரைக் கடித்த பெண்; மருத்துவமனையில் 55 தையல்கள்!

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் குடும்பத் தகராறின்போது, காயத்ரி என்ற பெண் தனது மைத்துனர் ரஜ்னீஷின் பிறப்புறுப்பைக் கடித்ததில் அவர் படுகாயமடைந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தனது மகனை ரஜ்னீஷ் தாக்கியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக அவரிடம் கேள்வி கேட்கச் சென்றபோது, இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த மோதலின்போது காயத்ரி கடித்ததில் ரஜ்னீஷுக்குக் காயம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, காயமடைந்த ரஜ்னீஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்குக் காயத்தின் தீவிரம் காரணமாக 55 தையல்கள் போடப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையே, ரஜ்னீஷின் மனைவி அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து, சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.




கருத்துகள் (0)