வியாழன், நவம்பர் 19, 2026
உண்மையின் குரல்
தமிழகம்

கரூர் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் கிணற்றில் குதித்து உயிரிழப்பு.. போலீசார் தீவிர விசாரணை!

கரூர் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் கிணற்றில் குதித்து உயிரிழப்பு.. போலீசார் தீவிர விசாரணை!

கரூர் மாவட்டம் வாங்கல் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் கிணற்றில் குதித்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சின்ன காளிபாளையம் பகுதியில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதில் ராமசாமி (62), அவரது மனைவி ஜானகி (60), மகள் சுகுணா மற்றும் குழந்தைகளான ஷிவானி (10), ஆதீரன் (4) ஆகிய ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர்.

 

இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணையைத் தொடங்கினர். தொடர்ந்து, கிணற்றிலிருந்து ஐந்து பேரின் உடல்களையும் மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் உயிரிழந்ததற்கான காரணம் குறித்து இதுவரை உறுதியான தகவல் வெளியாகவில்லை. குடும்பத்தினர் இந்த முடிவை எடுக்க என்ன காரணம் என்பது தொடர்பாக போலீசார் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிரேதப் பரிசோதனை மற்றும் விசாரணையின் முடிவில் மேலும் விவரங்கள் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.