வியாழன், நவம்பர் 19, 2026
உண்மையின் குரல்
தமிழகம்

தமிழக ஆளுநர் ஆர்.வி.அர்லேகர் மருத்துவமனையில் அனுமதி!

தமிழக ஆளுநர் ஆர்.வி.அர்லேகர் மருத்துவமனையில் அனுமதி!

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.வி.அர்லேகர் உடல்நலப் பாதிப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவமனையில் அவருக்கு மருத்துவர்கள் தேவையான பரிசோதனைகளை மேற்கொண்டு, தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

 

இந்நிலையில், ஆளுநர் ஆர்.வி.அர்லேகர் அடுத்த இரண்டு நாட்களுக்கு மருத்துவமனையிலேயே தங்கியிருந்து சிகிச்சை பெறுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், அவரது உடல்நிலை மற்றும் மருத்துவ சிகிச்சை தொடர்பான விரிவான விவரங்களை மருத்துவமனை நிர்வாகம் இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.