செவ்வாய், நவம்பர் 17, 2026
உண்மையின் குரல்
தமிழகம்

கொள்ளை வழக்கில் கைதான பெண்ணை தவெக நிர்வாகி எனப் பரப்புவதாக புகார்; காவல் நிலையத்தில் எம்எல்ஏ மனு!

கொள்ளை வழக்கில் கைதான பெண்ணை தவெக நிர்வாகி எனப் பரப்புவதாக புகார்; காவல் நிலையத்தில் எம்எல்ஏ மனு!

மதுரை தனிஷ்க் நகைக்கடை கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்ட பெண் தொடர்பாக சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவல்கள் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. கைது செய்யப்பட்ட பெண்ணை தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த நிர்வாகி எனக் குறிப்பிட்டு, அவரது புகைப்படங்களையும் சிலர் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருவதாக தவெக எம்எல்ஏ தங்கபாண்டியன் குற்றம்சாட்டியுள்ளார்.

 

இந்தத் தகவல்கள் தவறானவை என்றும், உண்மைக்குப் புறம்பான செய்திகளைப் பரப்புவதன் மூலம் கட்சியின் பெயருக்குத் தேவையற்ற பாதிப்பு ஏற்படுத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

இதுபோன்று ஆதாரமற்ற தகவல்களைப் பரப்புபவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, நேற்று (நவம்பர் 15) காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளார்.

 

மேலும், தான் அளித்த புகாரில் எந்தவொரு தனிநபரின் பெயரையும் குறிப்பிட்டுத் தெரிவிக்கவில்லை என்றும் தங்கபாண்டியன் விளக்கம் அளித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் குறித்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.