வியாழன், நவம்பர் 19, 2026
உண்மையின் குரல்
தமிழகம்

நீதிமன்றத்தில் இருந்து சிறுநீர் கழிக்கச் செல்வதாகக் கூறி தப்பியோடிய குற்றவாளி!

நீதிமன்றத்தில் இருந்து சிறுநீர் கழிக்கச் செல்வதாகக் கூறி தப்பியோடிய குற்றவாளி!

திருவண்ணாமலை மாவட்டம் கடலாடி பகுதியில் கடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்ற மணல் கடத்தல் வழக்கில் தொடர்புடைய கண்ணன் என்பவர், நேற்று (நவம்பர் 16) கலசப்பாக்கம் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜரானார்.

 

அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி உதயகுமார், கண்ணனை நீதிமன்ற வளாகத்தில் காத்திருக்குமாறு உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து, சிறுநீர் கழிக்கச் செல்வதாகக் கூறிவிட்டுச் சென்ற அவர், திடீரென அங்கிருந்து தப்பியோடியதாகக் கூறப்படுகிறது.

 

மேலும், தப்பிச் செல்லும் முயற்சியில் பெண் காவலர்களைத் தள்ளிவிட்டு ஓடியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்தச் சம்பவம் நடந்து 24 மணி நேரத்திற்கும் மேலாகியும் கண்ணன் பிடிபடவில்லை. இதையடுத்து அவரைத் தேடும் பணியில் காவல்துறையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.