17 வயது சிறுமியைப் புகைப்படம் எடுத்து மிரட்டிய காதலன் கைது!

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே, 17 வயது சிறுமியைத் தவறான முறையில் புகைப்படம் எடுத்து மிரட்டியதுடன், அந்தப் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டதாக 21 வயது இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆதித்யா என்ற அந்த இளைஞர், கடந்த 7 மாதங்களாக சிறுமியைக் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், சிறுமியின் புகைப்படங்களைத் தவறான முறையில் எடுத்துப் பயன்படுத்தி மிரட்டல் விடுத்ததுடன், அவற்றைச் சமூக வலைதளங்களிலும் பதிவிட்டதாகப் புகார் எழுந்துள்ளது.
இதையடுத்து, சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், ஆதித்யாவைக் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.




கருத்துகள் (0)