திங்கள், அக்டோபர் 26, 2026
உண்மையின் குரல்
இந்தியா

ரயில் பயணிகளுக்கு 45 காசில் ரூ.10 லட்சம் காப்பீடு! நாளை முதல் புதிய வசதி!

ரயில் பயணிகளுக்கு 45 காசில் ரூ.10 லட்சம் காப்பீடு! நாளை முதல் புதிய வசதி!

 

 

ரயிலில் முன்பதிவு டிக்கெட் எடுக்கும் பயணிகளுக்கு வெறும் 45 காசில் ரூ.10 லட்சம் வரை பயணக் காப்பீடு பெறும் வசதி நாளை (அக்.27) முதல் ரயில் நிலைய முன்பதிவு கவுன்டர்களிலும் அறிமுகமாகிறது. இதுவரை ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்பவர்களுக்கு வழங்கப்பட்ட இந்த வசதி, தற்போது நேரடியாக கவுன்டரில் டிக்கெட் வாங்குபவர்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

 

இந்தக் காப்பீடு விருப்பத்தின் அடிப்படையிலானது. ரயில் விபத்தால் உயிரிழப்பு அல்லது நிரந்தர முழு ஊனம் ஏற்பட்டால் ரூ.10 லட்சம் வரையும், நிரந்தர பகுதி ஊனத்திற்கு ரூ.7.5 லட்சம் வரையும், காயங்களுக்கான மருத்துவமனைச் செலவுக்கு ரூ.2 லட்சம் வரையும் காப்பீட்டுத் தொகை வழங்கப்படும். இறந்தவரின் உடலை எடுத்துச் செல்வதற்கு ரூ.10,000 வரை வழங்கப்படும். இந்தக் காப்பீட்டைத் தேர்வு செய்யும் பயணிகள் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துவதுடன், தங்களது மொபைல் எண்ணையும் அளிக்க வேண்டும்.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.