ரீல்ஸ் மோகத்தில் தவெக நிர்வாகிகள்: எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனம்!

தவெக தலைவர் விஜய்யைப் பின்பற்றி, அக்கட்சியின் தொண்டர்கள் முதல் எம்எல்ஏக்கள் மற்றும் அமைச்சர்கள் வரை அனைவரும் ரீல்ஸ் மோகம் கொண்டிருப்பதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். மக்களின் அத்தியாவசியப் பிரச்சனைகளுக்கு முக்கியத்துவம் அளிப்பதற்குப் பதிலாக, அவற்றிலிருந்து கவனத்தைத் திசைதிருப்பும் வகையில் தவெக கூட்டணி அரசு செயல்பட்டு வருவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், தவெக நிர்வாகிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் ரீல்ஸ் எடுப்பதில் அதிக ஆர்வம் காட்டுவதாகக் குறிப்பிட்டுள்ளார். தலைவரின் செயல்பாடுகளைப் பின்பற்றி கட்சியின் பல்வேறு நிலைகளில் இருப்பவர்களும் அதே பாணியில் செயல்படுவதாக அவர் தனது விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.
மேலும், பக்தி நிகழ்ச்சிகள் நடைபெறும் மேடைகளை ரீல்ஸ் எடுப்பதற்கும், தனிப்பட்ட விளம்பரத்திற்கும் பயன்படுத்துவதாகக் கூறி தவெகவினரின் செயல்பாட்டைக் கண்டித்துள்ளார். பக்தி மேடைகளை இவ்வாறு பயன்படுத்துவது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் தனது பதிவில் எடப்பாடி பழனிசாமி சாடியுள்ளார்.




கருத்துகள் (0)