புதன், நவம்பர் 18, 2026
உண்மையின் குரல்
அரசியல்

மத அரசியல் செய்கிறதா தவெக அரசு? நயினார் நாகேந்திரன் கேள்வி!

மத அரசியல் செய்கிறதா தவெக அரசு? நயினார் நாகேந்திரன் கேள்வி!

தமிழகத்தில் சமூகநீதியை முன்னிறுத்தி ஆட்சி நடத்துவதாகக் கூறப்படும் தவெக அரசு, மதம் சார்ந்த விவகாரங்களில் அரசியல் செய்கிறதா என்ற கேள்வியை தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் (X) சமூக வலைதளப் பக்கத்தில் கருத்து ஒன்றைப் பதிவிட்டுள்ளார்.

 

அதில், மதம் மாறிய இஸ்லாமியர்களுக்கும் இடஒதுக்கீடு கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டுவரப்படும் என சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஷாஜகான் தெரிவித்த கருத்துக்கு நயினார் நாகேந்திரன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

 

அமைச்சரின் இந்த அறிவிப்பு உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கும், இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கும் முரணானது என அவர் தனது பதிவில் விமர்சித்துள்ளார். சமூகநீதி என்ற பெயரில் அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் மதம் சார்ந்த அரசியலாக மாறுகிறதா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

 

அமைச்சரின் கருத்தைத் தொடர்ந்து இடஒதுக்கீடு தொடர்பான விவாதம் அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.

கருத்துகள் (0)

கருத்து தெரிவிக்க

நிர்வாகி அனுமதித்த பின் உங்கள் கருத்து வெளியாகும்.