யுபிஐ பணப் பரிவர்த்தனை வரம்பு ரூ.10 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ள நிலையில், இந்த வரம்பு உயர்வு செப் 15ம் தேதி முதல் அமலுக்கு வருவதாக இந்திய தேசிய பணப்பட்டுவாடா கழகம் அறிவித்துள்ளது. அதே நேரத்தில், தனிநபர் வங்கிக்கணக்கு பரிமாற்றம் ரூ.1 லட்சமாக மாற்றமின்றி தொடர்கிறது. மருத்துவம், கல்வி கட்டணம் வரம்பு ரூ.5 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடன் நிலுவைத்தொகையை செலுத்தும் வரம்பு ரூ.6 லட்சமாக உயர்த்தப்படுகிறது.




