அப்பா சொத்தில் பங்கு கேட்கும் அக்கா தங்கைகளே……
தாத்தா சொத்தில் பங்கு கேட்கும் பேரன் பேத்திகளே….
உங்க பிள்ளை வயசுக்கு வந்துச்சுன்னா தன்னிடம் பணம் இல்லை என்றாலும் கடன் வாங்கியாவது சீர்வரிசை செய்கிறான் தாய் மாமன்…
உங்க பிள்ளைக்கு சீர் செய்ய வாங்கிய கடனை அடைப்பது யார்???
தன்னுடைய கூடப்பிறந்த அக்கா, தங்கச்சியோட மாமனார் மாமியார் இறந்து விட்டால் நீங்களும் உங்க கணவரும் தானே சடங்கு செய்வீர்கள் உங்களுக்கு புது துணி மணி வாங்கி அந்த சபையில் அக்கா தங்கச்சயை விட்டு கொடுக்காமல் உங்களுக்கு சீர் செய்வது உங்க அண்ணன் தம்பி தானே???? இதற்கும் கடன் பட்டால் இந்த கடனை அடைப்பது யார்???
இந்தக் கடன் எல்லாம் அடைப்பது உங்க அண்ணன் தம்பி அவருடைய மனைவி அவருடைய பிள்ளைகள் தான் கஷ்டப்பட்டு இந்த கடத்தை அடைக்க வேண்டும்…
தாத்தா சொத்து பங்கேற்கும் பேரன் பேத்திகளே உங்கள் தாய்மாமன் வாங்கிய கடனுக்கு நீங்க வட்டி கட்ட மாட்டீங்க??
உங்க தாய்மாம யாருக்கு சீர் செஞ்சு கெட்டுப்போன உங்களுக்குத்தானே சீர் செஞ்சு கெட்டுப் போன அவனுடைய கஷ்டத்திலும் துக்கத்திலும் நீங்கள் பங்கு கொள்ள வேண்டும் அல்லவா??
சொத்துல மட்டும் பங்கு வேண்டும் அண்ணன் தம்பி தாய் மாமன் கடன் பட்டால் அவன் யாரோ நீ யாரோ என்று ஒதுங்கிக் கொள்வது…
அண்ணன் தம்பி கஷ்டப்படும்போது வராத பாசம் அரை ஏக்கர் ஒரு ஏக்கர் இருந்தா போதும் உடனே பாசம் வந்துவிடும் எங்களுக்கும் பங்கு வேண்டும் என்று
நல்லா இருக்கிறது உங்களுடைய பாசம்…