
பாட்டி வைத்தியம் என்றாலே சிறிது நேரத்தில் அணைத்துவிட நோய்களும் பறந்து ஓடிடும் அதனை பற்றி இங்கு காண்போம்..
ஓமத்தை லேசாக வருத்து பொடி செய்து 2 கிராம் அளவு எடுத்து அதனுடன் ஒரு கிராம் பச்சை கற்பூரம் சேர்த்து வெள்ளை துணியில் கட்டி நுகர மூக்கடைப்பு மூக்கில் நீர் பாய்தல் நெஞ்சு சளி பீனிசம் ஆகியவை நீங்கும், முடி நன்றாக வளர செம்பருத்தி பூவை அரைத்து நல்லெண்ணையில் காய்ச்சி வடிகட்டிய பின் தலைக்கு தேய்த்தால் தலைமுடி அடர்த்தியாக வளரும், முடி செழித்து வளர வாரம் ஒரு முறை வெண்ணெய் தலைக்கு தடவி ஒரு மணி நேரம் கழித்து கழுவி வந்தால் முடி நன்றாக வளரும், தேங்காய் எண்ணெய் கொஞ்சமா கொதிக்கவிட்டு கீழே இறக்குங்கள் அதில் கட்டி கற்பூரத்தை போட்டு கரைய விடுங்கள் கரைந்ததும் மெல்ல கை பொறுக்கும் சூட்டில் காலில் ஆணி உள்ள இடத்தில் நாலு சொட்டு விடுங்கள் இரண்டு அல்லது மூன்று நாட்கள் செய்தால் போதும் காலில் இருந்த ஆணி காணாமல் போகும், குறட்டை தொல்லையில் இருந்து விடுபட 200 மில்லி சுடுநீரில் 2 g ஏலக்காய் பொடி சேர்த்து தினமும் இரவில் உறங்கும் குடித்து வர விரைவில் மாற்றம் தெரியும் நல்ல உறக்கம் கிடைக்கும் உணவு குரல் வறச்சி நீங்கும்…!!