
முகப்பொலிவு முதல் கிரிமினசினி வரை..!! பேக்கிங் சோடாவின் நன்மைகள்..!!
பேக்கிங் சோடா என்றால் நம் அனைவருக்கும் நினைவில் வருவது சமையலுக்கு பயன்படுத்தும் ஒரு பொருள் என்று தான். ஆனால் சமையலில் இருந்து முகப்பொலிவு வரை அனைத்திற்கும் இந்த பேக்கிங் சோடாவை பயன்படுத்தலாம். அது எப்படி என்பதை பற்றி இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.
உணவில் பேக்கிங் சோடாவை அளவோடு பயன்படுத்தினால் தான் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கிறது. அளவுக்கு மீறினால் அதுவும் ஒரு விதமான ஆபத்துதான். மேலும் பேக்கிங் சோடா ஒரு சிறந்த கிருமி நாசினியாக பயன்படுகிறது. பேக்கிங் சோடா பூஞ்சை எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா வை எதிர்ப்பு பண்புகளை கொண்டிருக்கிறது. மேலும் முகப்பருக்களால் அவதிப்படுபவர்கள் தண்ணீரில் ஒரு ஸ்பூன் பேக்கிங் சோடாவை கலந்து பூசி வந்தால் முகப்பருக்கள் சரியாகும். அதுமட்டுமின்றி முகம் பொலிவுடன் அழகாகவும் தெரிய ஒரு ஸ்பூன் பேக்கிங் சோடாவை ரோஸ் வாட்டரில் கலந்து பேஸ்ட் போல செய்து முகத்தில் தடவி பத்து நிமிடம் கழித்து முகத்தை கழுவினால் முகம் பொலிவு பெறும். கண்டிப்பா இதையெல்லாம் ட்ரை பண்ணி பாருங்க.