உலகப் புகழ்பெற்ற தொழிலதிபரும், பங்குச் சந்தை முதலீட்டாளருமான வாரன் பஃபெட் தனது 95வது வயதில் ஓய்வு பெற்றார். 60 ஆண்டுகளாக பெர்க்ஸ்ஷைர் ஹாத்வே நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாகப் பணியாற்றிய அவர், தனது முதலீட்டுத் திறமையால் பல கோடி லாபம் ஈட்டியுள்ளார். அவருக்குப் பதிலாக, கிரெக் அபெல் (63) நேற்று (ஜன., 01) புதிய தலைமை நிர்வாக அதிகாரியாகப் பொறுப்பேற்றார். 1942ஆம் ஆண்டு பங்குச் சந்தையில் நுழைந்த அவர், தற்போது 150 பில்லியன் டாலர்களுடன் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 10வது இடத்தில் உள்ளார்.




