மத்தியப்பிரதேசம்: கார்கோன் மாவட்டத்தில் நர்மதா நதிக்கரையில் உணவு விஷம் காரணமாக சுமார் 200 கிளிகள் இறந்துள்ளன. ஆற்றங்கரையில் இறந்த நிலையில் கிளிகள் கண்டெடுக்கப்பட்டன. உயிருடன் மீட்கப்பட்ட சில கிளிகளும் விஷத்தன்மையின் காரணமாக சிறிது நேரத்திலேயே உயிரிழந்தன. பறவைகளிடமிருந்து எடுக்கப்பட்ட மாதிரிகள் பரிசோதனைக்காக ஜபல்பூருக்கு அனுப்பப்பட்டுள்ளன. பூச்சிக்கொல்லி தெளிக்கப்பட்ட வயல்களில் பயிர்களை தின்றதால் இறப்பு நேர்ததா? அல்லது நர்மதா நதி நீர் காரணமா? என விசாரிக்கப்பட்டு வருகிறது.




