
விருந்தும் மருந்தும் மூன்றே நாள் என்பதின் உண்மை பொருள் என்னவென்று தெரியுமா..??
நமது முன்னோர்களின் காலகட்டத்தில் இருந்து இந்த வாக்கியத்தை நாம் அனைவரும் கேள்விப்பட்டிருப்போம் விருந்தும் மருந்தும் மூன்று நாள் தான் பா என்று நம் வீட்டில் உள்ள பெரியவர்கள் அனைவரும் கூறி நாம் கேள்விப்பட்டிருப்போம். இந்நிலையில் விருந்தும் மருந்தும் மூன்றே நாள் என்பதின் உண்மை பொருள் என்ன என்பதை பற்றி இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.
கிழமைகளில் ஞாயிறு செவ்வாய் வியாழன் ஆகிய மூன்றும் சூரிய நாட்கள். திங்கள் புதன் வெள்ளி ஆகிய மூன்றும் சந்திர நாட்கள். சனி இரண்டிற்கும் பொது நாள். சூரிய நாளில் மருந்தும், சந்திரநாளில் விருந்தும், சம நாளில் நீராடலையும் தமிழர் வைத்துக்கொண்டனர். விருந்துகள் சந்திர நாட்களிலும் மருந்துகள் சூரிய நாட்களிலும் அருந்த வேண்டும் என்பதை குறிக்கவே விருந்தும் மருந்தும் மூன்றே நாள் என்றனர். இதுதான் இதற்கான உண்மையான அர்த்தம்.