வீட்டிற்கு வருபவர்களுக்கு தண்ணீர் கொடுப்பது ஏன்..? தெரிஞ்சுக்கோங்க பாஸ்.!!

நம் இந்திய மக்களின் மரபுபடி வீட்டிற்கு யார் வருவார் வந்தாலும் அவர்களுக்கு முதலில் தண்ணீர் கொடுப்பது வழக்கம். வருபவர்கள் கோபத்துடன் வந்தாரா..? மனமகிழ்ச்சி வெளிப்படுத்த வந்தாரா..? என்பது யாருக்கும் தெரியாது.

அவர் பல இடங்களுக்கு சென்று தாகத்துடன் வந்திருக்கலாம். இதனால் அவர் உடலில் ஆற்றல் குறைந்திருக்கும். அதே போல மனரீதியாகவும் சோர்வாக இருப்பார்  இவ்வாறாக மன அழுத்தம் கோபம் உட்பட பல விஷயங்களை கட்டுப்படுத்தும் தன்மை என்பது தண்ணீருக்கு உள்ளது.

அதனால் ஒருவர் வீட்டுக்கு வந்ததும் முதலில் அவரின் மனநிலையை சரி செய்ய தண்ணீர் கொடுக்கப்படுகின்றது. மேலும் தண்ணீர் குடிப்பதனால் நமது  மனநிலை நல்ல தன்மையை அடையும். கோபம் மற்றும் வெறுப்புணர்வு ஆகிய ஆற்றல்கள் இருந்தாலும் அவை கட்டுப்படும். நாம் கோபத்தில் இருக்கும்போது சிறிதளவு தண்ணீர் குடித்தால் அந்த நீர் சில நிமிடங்களில் நமது மனநிலையை சாந்தப்படுத்தும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Read Previous

முட்டை வேகவைக்கும் போது இப்படி செஞ்சி பாருங்க..!! அசந்து போவீங்க.!!

Read Next

உங்க குழந்தைக்கு உதட்டோடு உதடு முத்தம் கொடுக்குறீங்களா..? மருத்துவர்கள் எச்சரிக்கை.!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular