நாளைக்கு காலை உணவு மதிய உணவு எல்லாத்தையும் இன்று இரவே தயார் நிலையில் வைக்க வேண்டும் இதுதான் வெளிநாட்டின் வாழ்க்கை……
ஊரில் இருந்தால் சுடச்சுட சாதம் வடித்து சாம்பார் வைத்து அப்பளம் பொறித்து மனைவியோ இல்லையென்றால் அம்மாவோ தங்கையோ அக்காவோ வருவார்கள்….
ஆனால் வெளிநாட்டில் அப்படி இல்லை சில கம்பெனிகளில் மெஸ் இருக்கும்.. மெஸ் இல்லாத கம்பெனியில் நாம தான் சமையல் செய்து சாப்பிட வேண்டும்…
காலை உனக்கு ஒரு பாக்கெட் குப்புஸ் வாங்கி விட்டால் போதும் ஒரு டப்பா குழம்பில் சாப்பிட்டு விடலாம்..
இன்னொரு டப்பா குழம்பும் சாதமும் இருக்கிறது மதிய உணவாக …
காலை உணவும் மதிய உணவும் குளிர்ந்த சாப்பாடு தான்
இரவு மட்டும்தான் சூடாக சாப்பிடுவார்கள்… (சாப்பிடுவோம்)
இதுதான் பெரும்பாலான வெளிநாட்டில் வாழும் நண்பர்களின் வாழ்க்கை….
போதும்டா சாமி வெளிநாட்டு வாழ்க்கை கூலோ கஞ்சியோ கஷ்டமா நஷ்டமோ
குடும்பத்துடன் சந்தோஷமாக ஊரில் போய் வாழ்க்கை வாழலாம் என்று நினைக்கும் போது தான்…. ஊரில் ஏதோ ஒரு தேவைகள் வந்து விடுகிறது.. (மகன் பள்ளி படிப்பு மகளுக்கு கல்யாணம் தங்கச்சிக்கு போடவேண்டிய தங்க நகை..)
தன்னுடைய முடிவை மாற்றிக் கொண்டு வாழ்பவர்கள் எத்தனையோ பேர்…….




