இன்றைய சூழலில் பலரும் கைகால் வலி மற்றும் கை கால் மறுத்து போகும் பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகின்றனர் அப்படி இருக்க கை கால் மறுத்து போக காரணம் என்ன என்று பார்ப்போம்…
ரத்த ஓட்டம் தடைபடுவதால் வலி தசைப்பிடிப்பு உணர்வின்மை செரிமான பிரச்சனைகள் மற்றும் கைகள் அல்லது கால்கள் மறுத்து போவது போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தும் எனினும் ஒரு சில உணவுகள் மூலம் ரத்த ஓட்டத்தை சீராக்க முடியும் எனவே சரியான ரத்த ஓட்டத்தை உறுதி செய்ய ஒருவர் செய்ய வேண்டிய சில பயனுள்ள உணவு மாற்றங்கள் குறித்து பார்க்கலாம், மீனில் உள்ள ஒமேகா-3 அமிலங்கள் செயல்பாட்டிற்கு நன்மை பயக்கும் அவை ரத்தக்குழாய்களை ரத்தக்கட்டில் இருந்து தடுக்கின்றன, ரத்த அழுத்தத்தை பராமரிக்கின்றன இது ரத்த ஓட்டம் மற்றும் சுழற்சியை எளிதாக்குகிறது வஞ்சரம் கானாங்கெளுத்தி சுரை மற்றும் டரவுட் போன்ற கொழுப்பு நிறைந்த மீன்களில் ஒமேகா 3 அமிலங்கள் அதிகம் நிறைந்துள்ளது, இந்த மீன் வகைகளை சாப்பிட்டு வரும் பொழுது நமது கைக்கால் மறுத்துப் போகும் பிரச்சனை சரியாகும், அதேபோல் கீரை வகைகளை வாரத்தில் இரண்டு முறை எடுத்துக் கொள்வதன் மூலம் உடலில் எதிர்ப்பு சக்தி அதிகம் பெற்று உடல் ஆரோக்கியமாகவும் புத்துணர்வாகவும் காணப்படும்..!!




