இன்றைய காலகட்டத்தில் வாழும் காலத்திலேயே பிறரிடம் அன்பை செலுத்தாமல் அவர்கள் செய்த ஏதோ ஒன்றை நினைத்து அவர்கள் மீது கோபம் வெறுப்பு நம் கண்களுக்கு தென்படும் அப்படி இருக்க இந்த வாழ்வு ஒரு சில குறிப்பிட்ட காலமே அதுவரை அன்போடும் பண்போடும் பழக வேண்டும் என்கிறார்கள் நமது முன்னோர்கள்…
அதேபோல் உங்கள் அன்பை காட்ட வேண்டிய சில உயிர்கள் பற்றி காண்போம் உன் அன்பை தென்னை மரத்தின் மீது காட்டு வெற்றியடைந்தால் ஒரு வாழைமரம் நடு தோல்வி அடைந்தால் கருவேப்பிலை மரம் நடு சும்மா இருக்கும் நேரங்களில் காய்கறி விதைகளை நடு கையில் பணம் இருந்தால் பூச்செடிகள் நடு உன்னை விட்டு யார் பிரிந்தால் மாடி தோட்டம் நடு எதிர்கால சந்ததியினருக்கு மாமரம் நடு பலனை எதிர்பார்க்காமல் கடமை செய்ய நினைத்தால் பனை நடு சந்தோஷமாக இருக்கும் போது வேப்பமரம் நடு கவலையுடன் இருக்கும் போது செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சு வீட்டில் இடம் இருந்தால் முடிந்தவரை மரம் நடு இல்லை என்றால் முடிந்தவரை இதனை மற்றவர்களுக்கு பகிரு, மனிதனிடம் காட்டும் அன்பு ஒரு சில நாட்களை மட்டும் நீடிக்கும் ஆனால் இயற்கையிடம் காட்டும் அன்பு நாம் இல்லாத காலகட்டத்திலும் நம் தலைமுறையினருக்கு கீட்டும்…!!




