விழுப்புரம் மாவட்ட பாஜகவிலிருந்து விலகி, அண்ணாமலை தலைமையிலான ‘WE THE LEADERS’ அமைப்பில் இணைந்திருந்த செஞ்சி கிழக்கு மண்டலத் தலைவர் சிவகுமார், மீண்டும் பாஜகவில் இணைந்துள்ளார்.
மாவட்ட பொறுப்பாளர் எத்திராஜ் மற்றும் வடக்கு மாவட்ட பொதுச்செயலாளர் அன்பழகன் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் முன்னிலையில் சிவகுமார் மீண்டும் கட்சியில் இணைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, அண்ணாமலை தலைமையிலான ‘WE THE LEADERS’ அமைப்பு இன்னும் அரசியல் கட்சியாக மாறி முழு அளவில் செயல்பாடுகளைத் தொடங்காததால், அதில் இணைந்த சிலர் அதிருப்தியில் இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன.




