கர்நாடகாவில் வனத்துறையினரால் 3 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் பேசிய சிபிஐ எம்எல்ஏ தளி ராமச்சந்திரன், சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்தார்.
சம்பவத்தில் தொடர்புடைய வனத்துறை அதிகாரிகள் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றும், இந்த விவகாரம் குறித்து கர்நாடக அரசு சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு உரிய நீதி கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், தமிழக அரசு கர்நாடக அரசுக்கு தேவையான அழுத்தத்தை தொடர்ந்து கொடுக்க வேண்டும் எனவும் தளி ராமச்சந்திரன் சட்டப்பேரவையில் கேட்டுக்கொண்டார்.




