மீனவர்களை பாதிக்கும் திட்டங்களுக்கு அனுமதி இல்லை! – அமைச்சர் ராஜீவ்!

 

 

தமிழகத்தில் மீன்வளத்தையும், மீனவர்களின் வாழ்வாதாரத்தையும் பாதிக்கும் எந்த திட்டத்திற்கும் அனுமதி வழங்கப்படாது என சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ராஜீவ் சட்டப்பேரவையில் உறுதியளித்துள்ளார்.

 

கவன ஈர்ப்பு தீர்மானம் மீதான பதிலுரையில் பேசிய அவர், ஹைட்ரோகார்பன் திட்டங்களின் கீழ் திமுக ஆட்சியில் 3 கிணறுகளுக்கும், அதிமுக ஆட்சியில் ஒரு கிணற்றுக்கும் அனுமதி வழங்கப்பட்டதாக தெரிவித்தார்.

 

அவற்றில் தற்போது 3 கிணறுகள் செயல்பாட்டில் இல்லை என்றும் அமைச்சர் விளக்கம் அளித்தார்.

 

மேலும், மீன்வளம் மற்றும் மீனவர்களின் நலனை பாதிக்கும் வகையில் எந்த ஒரு திட்டம் வந்தாலும், தவெக அரசு அதற்கு அனுமதி வழங்காது என அமைச்சர் ராஜீவ் திட்டவட்டமாக தெரிவித்தார்.

Read Previous

போலீஸ் அதிகாரியை அறைந்த இளைஞர் கைது! 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு!

Read Next

அண்ணாமலை அமைப்பில் இருந்து விலகிய நிர்வாகி மீண்டும் பாஜகவில் இணைவு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular