கேரள மாநிலம் கொல்லத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், தனது கணவர் தங்களது அந்தரங்க வீடியோக்களை ஆபாச இணையதளங்களுக்கு விற்பனை செய்ததாக காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.
வெளிநாட்டில் வசித்தபோது பதிவு செய்யப்பட்ட தனிப்பட்ட காட்சிகளை கணவர் இணையதளங்களில் விற்றதாகவும், இதுகுறித்து புகார் அளித்தால் கொலை செய்துவிடுவதாக மிரட்டியதாகவும் அந்தப் பெண் குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், தங்களது 4 வயது மகள் முன்னிலையில் கணவர் முறையற்ற பாலியல் நடத்தையில் ஈடுபட்டதாகவும் அவர் புகாரில் தெரிவித்துள்ளார். இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.




