தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய்யை புகழ்ந்து பேசிய தவெக எம்எல்ஏ தாஹிரா, விஜய்யின் தாயார் ஷோபாவுக்கு நன்றி தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் பேசும்போது, விஜய் நடித்த ‘சிவகாசி’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘கோடம்பாக்கம் ஏரியா’ பாடலின் வரிகளை சுட்டிக்காட்டிய தாஹிரா, ஏழை மற்றும் எளிய மக்களை நினைத்தால் அவர்களும் நாளை உயர்ந்த நிலைக்கு வர முடியும் என்ற கருத்தை எடுத்துரைத்தார்.
மேலும், அந்தப் பாடலை பாடி முதலமைச்சர் விஜய்யை தந்த தாய் ஷோபாவுக்கும் இந்த நேரத்தில் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் என அவர் கூறினார். அவரது பேச்சு சட்டப்பேரவையில் கவனம் பெற்றது.




