கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெற்ற கண்காட்சியில், ‘மிதக்கும் உணவகம்’ என அழைக்கப்படும் 30 மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்டிருந்த உணவகத்தில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த 2 குழந்தைகள் உட்பட 10 பேர் இயந்திரக் கோளாறு காரணமாக செவ்வாய்க்கிழமை அன்று அந்தரத்தில் சிக்கிக் கொண்டனர். ஒன்றரை மணி நேர போராட்டத்திற்குப் பிறகு, ஸ்கை லிப்ட் வாகனம் மூலம் தீயணைப்புத் துறையினர் அவர்களை பத்திரமாக மீட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.




