இரவு நேர தோசை மாரடைப்பை ஏற்படுத்தலாம்..!! ஏன் தெரியுமா..??

Oplus_131072

 

வாதம் பித்தம் கபம்
இதில் வாதம் செல்களுக்குள் ஊடுறுவும் அளவு நுட்பமான காற்று…இந்த காற்று உடலில் கெட்டுப்போனால் உடல் சிதைய தொடங்கும்.உடலில் இந்த காற்று எல்லா இடங்களிலும் விரவி உள்ளது.

இதை காற்றின் அளவு அதிகரித்தால் உடல் அதை பல வகைகளில் வெளியேற்ற தொடங்கும்.ஆனால் அது கெட்டு போனால் முழுமையாக வெளியேற்ற முடியாமல் போகும்…
உடலில் காற்று கெட்டுபோனால்

1) செரிமானம் கெட்டுப்போகும்

2) உடலில் நரம்பு மண்டலம் சிதைய தொடங்கும்.அதனால் உடலில் எந்த இடத்தில் நரம்பு இழுத்துக்கொள்ளுதல் வரலாம்

3) அங்காங்கே வலி உண்டாகும்

4) எலும்புகள் வழுவிழந்து போக தொடங்கும் கால் கை வலி உண்டாகும்

தற்காலத்தில் மனித உடலில் உருவாகும் பாதி நோய்களுக்கு காரணம் இந்த வாதமே !

நீங்கள் உடலுக்குள் அனுப்பும் உணவில் காற்றுதன்மை அதிகமாக உள்ளதா என்பதை ஆராய்ந்து உணவாக்குதல் சிறப்பு ….எடுத்துக்காட்டாக பயிறு பருப்பு போன்ற விதைகளை உணவாக்கும் போது கவணமாக இருக்க வேண்டும்….அதிகமான அளவு காற்றுள்ள உணவுகளை எடுத்துக்கொள்ளும் போது அதற்கேற்ற உடல் உழைப்பு இருக்க வேண்டும்…இல்லை எனில் அது முதலில் ஏப்பமாக வெளியேற்ற தொடங்கும்…குடலுக்குள் சென்ற பிறகு ஆசணகாற்றாக வெளியேற்ற தொடங்கும்…

இந்த இரண்டும் நடக்க உங்கள் உடல் அந்த நேரத்தில் இயக்கத்தில் இருக்க வேண்டும்..இல்லை எனில் காற்று உடலில் பல இடங்களுக்கும் அனுப்பபட்டு நரம்புகளை பலவீனப்படுத்த தொடங்கும்….செரிமானம் சிதையும்… இரவு நேரத்தில் அதீத உணவுகளை எடுத்து கொண்டு உடனே உறக்க செல்லுதல் மாரடைப்பு போன்ற பெரிய விளைவுகளையும் ஏற்படுத்தலாம்….

பலருக்கும் மூச்சு இறைப்பு அதாவது வீசிங் வர காரணம் வயிற்றில் உள்ள காற்றே…..

இரவு நேரத்தில் சுட்ட உணவுகள் அதாவது தோசை …சப்பாத்தி போன்ற உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்கவும்….அதற்கு பதில் இட்லி ….இடியாப்பம் போன்ற நீராவியில் வேகவைத்த உணவுகளை எடுத்துக்கொள்ளுங்கள்….குறைவான அளவு பருப்பு பயறுகளை எடுத்துக்கொள்ளுங்கள்….

தீர்வு : உங்கள் உடலில் வாதத்தினால் வந்த நோயில் இருந்து விடுபட நாட்டுசக்கரையை அடுப்பில் ஏற்றி அதில் 10 பல் பூண்டு சேர்த்து வதக்கி எண்ணெய் பதம் வந்தவுடன் இறக்கி அந்த நாட்டுசக்கரை பாகை 3 வேளையும் நக்கி சாப்பிடவும்..5 நாட்கள் வரை சாப்பிடலாம்…இந்த பாகு பூண்டின் தன்மையை உறிஞ்சி இரத்ததில் உடனே கலந்து உடலின் மூளைமுடுக்கெல்லாம் சென்று கெட்டுப்போன காற்றை வெளியேற்றும்… கருப்பட்டியில் இதை செய்தால் அது செரிக்க நீண்ட நேரம் ஆகும்…முன்னோர்கள் பூண்டு குழம்பை எடுத்துக்கொண்டார்கள்…பூண்டை செரித்து மருந்தாக்க செரிமானம் நன்றாக இருந்தது…இப்போது அப்படி இல்லை பலருக்கும் செரிமான சிக்கல் உண்டு எனவே நாட்டுசக்கரை பாகே சிறந்தது…

Read Previous

அந்தரத்தில் சிக்கிய 10 பேர்..!! கொடிசியா கண்காட்சியில் பரபரப்பு..!!

Read Next

கிரீன்லாந்து விவகாரம்..!! டிரம்ப் வரி விதிப்பு திட்டத்தை வாபஸ் பெற்றார்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular