அன்றும் இன்றும்.. மிக அருமையான பதிவு..!! படித்ததில் மிகவும் பிடித்தது..!!

#அன்று

வீடு நிறைய குழந்தைகள்..

#இன்று

வீட்டுக்கொரு குழந்தை.

 

அன்று

பெரியவர் சொல்லி பிள்ளைகள் கேட்டனர்..

இன்று

சிறியவர் சொல்ல பெரியவர் முழிக்கிறார்கள்.

 

#அன்று

குறைந்த வருமானம்

நிறைந்த நிம்மதி..

#இன்று

நிறைந்த வருமானம்

குறைந்த நிம்மதி.

 

அன்று

படித்தால் வேலை…

இன்று

படிப்பதே வேலை

 

#அன்று

வீடு நிறைய உறவுகள்..

#இன்று

நிறைய வீடுகள் உறவுகள் இல்லை.

 

அன்று

உணவே மருந்து…

இன்று

மருந்துகளே உணவு.

 

#அன்று

முதுமையிலும் துள்ளல்…

#இன்று

இளமையிலேயே அல்லல்.

 

அன்று

உதவிக்கு தொழில் நுட்பம்..

இன்று

தொழில் நுட்பம் தான் எல்லாம்.

 

#அன்று

யோக வாழ்க்கை…

#இன்று

எந்திர வாழ்க்கை.

 

அன்று

படங்களில் ஒரு குத்து பாட்டு..

இன்று

குத்து பாட்டில் தான் படமே.

 

#அன்று

ஓடினோம் வயிற்றை நிறைக்க…

#இன்று

ஓடுகின்றோம் வயிற்றை குறைக்க.

 

அன்று

பெரியோர்கள் பாதையில்..

இன்று

இளைஞர்கள் போதையில்.

 

#அன்று

ஒரே புரட்சி…

#இன்று

ஒரே வறட்சி.

 

அன்று

சென்றார்கள் வளர்ச்சியில்…

இன்று

செல்கிறது சினிமா கவர்ச்சியில்.

 

#அன்று

ஊரே கூட கோலாகல விழா..

#இன்று

ஊருக்கே போக முடியாத மூடுவிழா.

 

அன்று

கைவீசி நடந்தோம்…

இன்று

கைப்பேசியுடன் நடக்கிறோம்.

 

#அன்று

ஜனநாயகம்…

#இன்று

பணநாயகம்.

 

அன்று

விளைச்சல் நிலம்..

இன்று

விலை போன நிலம்.

 

#அன்று

கோடை விடுமுறையில் உறவுகளிடம் தஞ்சம்..

#இன்று

கோடை விடுமுறையில் உறவுகளிடம் அச்சம்.

 

அன்று

நிறைந்தது மகிழ்ச்சி…

இன்று

நடக்குது வெற்று நிகழ்ச்சி.

 

#அன்று

வாழ்ந்தது வாழ்க்கை…

#இன்று

ஏதோ வாழும் வாழ்க்கை.

Read Previous

இட்லி அவிக்கிறப்போ துணியில் இட்லி ஒட்டாமல் வருவதற்கு நச்சுன்னு 4 டிப்ஸ்..!!

Read Next

குடிப்பழக்கத்தை நிறுத்த மருந்து..!! குடியை நிறுத்த சித்த வைத்தியம்..!! கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular