அப்பா என்பவர் யார்?
நம் முன்னோர்களின் காலகட்டத்தில் இருந்து அப்பாவிற்கும் குழந்தைகளுக்கும் அவ்வளவு நெருக்கம் இல்லை என்பது உண்மைதான். நெருக்கம் இருந்தாலும் அதை வெளியில் காட்டிக் கொள்ள மாட்டார் அப்பா. இந்நிலையில் அப்பா என்பவர் யார்? அப்பாவை எவ்வாறு புரிந்து கொள்வது என்பதை பற்றி நாம் இந்த பதிவில் பார்க்கலாம்.
அப்பா என்பவர்அழத் தெரியாதவர் அல்ல கண்ணீரை மறைத்து வைக்க தெரிந்தவர். அப்பா என்பவர் அன்பில்லாதவர் அல்ல அன்பை மனதில் வைத்து சொல்லில் வைக்க தெரியாதவர். அப்பா என்பவர் பணம் தேடுபவர் அல்ல தன் குடும்பத்தின் தேவைக்காக தன்நிலை மறந்து ஓடுபவர் . அப்பா என்பவர் சிரிக்கத் தெரியாதவர் அல்ல சிரிக்க மறந்து சிந்தனையில் ஆழ்ந்திருப்பவர் . அப்பா என்பவர் கரடு முரடானவர் அல்ல நடிக்க தெரியாமல் கோபத்தை கொட்டி விட்டு வருந்துபவர். இதைப் புரிந்து கொண்டாலே போதும்.




