Oplus_131072
யார் ஏழை யார் பணக்கார 3ஸ்டார் ஹோட்டலில் தங்கி இருக்கும் சுற்றுலாவிற்கு வந்த ஒரு பணக்கார வீட்டு ஆறு மாத குழந்தையின் அம்மா ஹோட்டல் மேலாளரிடம் குழந்தைக்கு ஒரு கப் பால் வேண்டும் என்று கேட்கிறார். அதற்கு அந்த மேலாளர் பாலுக்கு நீங்கள் தனியாக பணம் செலுத்த வேண்டும் என்று கூற பணக்கார அம்மாவும் பணத்தை செலுத்தி அந்தப் பாலை வாங்கி குழந்தைக்கு ஊட்டுகிறார். ஒருநாள் சுற்றி பார்த்துவிட்டு ஹோட்டலுக்கு திரும்பும் வழியில் குழந்தை பசியால் அழுததால் ரோட்டில் ஓரத்தில் இருந்த டீக்கடையில் ஒரு கப் பால் வாங்கி குழந்தைக்கு ஊட்டினார். பிறகு பாலுக்கு பணம் எவ்வளவு என்று டீக்கடைக்காரரிடம் கேட்க டீக்கடைக்கார பெரியவர் குழந்தைக்கு கொடுக்கும் பாலுக்கு நாங்கள் காசு வாங்குவதில்லை என்று சிரித்த முகத்தோடு பதில் அளித்தார். பணமுள்ளவர் எல்லாம் பணக்காரர் அல்ல அதை கொடுக்க நினைப்பவனே உண்மையான பணக்காரன் .பொதுநலம் என்பது புல்லாங்குழல் போன்றது சுயநலம் என்பது கால்பந்து போன்றது இவை இரண்டுமே காற்றால் இயங்குகின்றன. ஆனால் ஒன்று முத்தமிடப்படுகின்றது மற்றொன்று உதைக்கப்படுகின்றது தான் வாங்கிய காற்றை சுயமாக வைத்துக் கொள்வதால் கால்பந்து உதைபடுகிறது. ஆனால் தான் வாங்கிய காற்றை இசையாக புல்லாங்குழல் தருவதால் அது முத்தமிடப்படுகிறது. சுயநலம் உள்ள மனிதன் புறக்கணிக்கப்படுவான் பொது நலம் உள்ளவன் போற்றப்படுவான்.




