அப்பா உங்க கனவில் வந்தால் என்ன பலன் – 1
ஒரு மனிதனுக்கு இயல்பாக கனவு வருவது வழக்கம் தான் இதில் உறவினர்கள் அல்லது அப்பா கனவுகள் வரும் இறந்து போன அப்பா கனவுகள் வரும் உயிரோடு இருக்கும் அப்பாவும் கனவில் வருவார்கள் இதற்கு என்ன அர்த்தம் என்று நம் கூறியுள்ளோம் இதை பார்த்து நீங்க தெரிந்து கொள்ளலாம்
உங்களது அப்பா உயிரோடு இருந்து அவர் கனவில் வந்தால் அவர் விருப்பத்துக்கு எதிரா ஏதோ ஒன்று செய்யப் போகிறீர்கள் என்று அர்த்தமாகும் அந்த விஷயத்தை நீங்கள் செய்தால் உங்களுக்கு ரொம்பவே கஷ்டமான ஒரு சூழ்நிலை உண்டாகும்.
இறந்த அப்பா கனவில் வந்தால் என்ன பலன்:
உங்களது அப்பா இறந்து போற மாதிரி கனவு வந்தால் நீங்கள் ஏதோ ஒரு விஷயத்தில் மாட்டிக் கொண்டு சமாளிக்க முடியாமல் இருந்து கொண்டிருக்கிறீர்கள் அந்த விஷயத்தில் இருந்து நீங்கள் விலகி விடுவீர்கள் என்று அர்த்தமாகும்.
அப்பா கனவில் வந்தால்:
நீங்கள் உங்க அப்பா கனவில் பேசுவது போல கனவு கண்டால் உங்களுக்கு ஏற்படக்கூடிய ஒரு பிரச்சனையில் இருந்து யாரோ ஒருவர் உங்களுக்கு உதவி பண்ணுவார்கள் என்று அர்த்தம் ஆகும்.
அப்பா கூட விளையாடுவது போல் கனவு கண்டால்:
நீங்க அப்பா கூட விளையாடுவது போல் கனவு கண்டால் உங்க வயதுக்கு ஏத்த மாதிரி நீங்க மாற வேண்டிய சூழ்நிலையும் சில பொறுப்புகளை நீங்கள் சுமக்கும் சூழ்நிலை வந்திருக்கிறது என்று அர்த்தமாகும்.
உங்க அப்பா கூட நீங்க சந்தோசமா இருக்கிற மாதிரி கனவு கண்டால் உங்களுக்கு இருக்கிற பிரச்சனைகள் கூடிய விரைவில் சரியாகிவிடும் என்று அர்த்தமாகும்.
நீங்கள் உங்க அப்பாவை கட்டிப்பிடிப்பது போல் கனவு கண்டால் உங்கள் குடும்பத்தில் ஏதேனும் ஒரு மகிழ்ச்சியான செய்தியை காண்பீர்கள் என்று அர்த்தமாகும்.
அப்பா கனவில் கோபமாக இருப்பது போல் கனவு கண்டால்:
உங்களது அப்பா கனவில் கோபமாக இருப்பது போல் கனவு கண்டால் விரைவில் எடுக்கக்கூடிய முடிவுகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்பதை குறிக்கும் ஒரு சில நேரங்களில் குடும்பங்களில் பிரச்சனை ஏற்பட வாய்ப்பு அதிகமாக உள்ளது ஏதேனும் குடும்பத்தில் இருப்பவர்களிடையே ஏதேனும் தவறாக பேசி விட்டால் உடனே மன்னிப்பு கேட்டு விடுங்கள்.
அப்பா கனவில் அழுவது போல் கனவு கண்டால்:
உங்களது அப்பா கனவில் அழுவது போல் கனவு கண்டால் உங்களது நம்பிக்கை நிறைவேறாது என்று அர்த்தமாகும் நீங்க ஏதோ ஒரு பொருளை வாங்க வேண்டும் என்று நம்பிக்கை அதிகமாக வைத்திருப்பீர்கள் அது உங்களுக்கு கிடைக்காமல் போறதுக்கு வாய்ப்பு அதிகமாக உள்ளது என்று அர்த்தம் ஆகும்
உங்களது அப்பா சந்தோஷத்தில் அழுவது போல் கனவு கண்டால் நீங்கள் போராடிக் கொண்டிருந்த ஒரு சில வெற்றிகரமான விஷயங்களை முடிப்பீர்கள் என்று அர்த்தமாகும்.
அப்பா சிரித்துக் கொண்டு இருக்கும் மாதிரி கனவு கண்டால்:
உங்களது அப்பா சிரித்துக் கொண்டு இருக்கும் மாதிரி கனவு கண்டால் நீங்கள் எடுக்கிற முடிவுகள் சரியாக இருக்கிறது என்று அர்த்தத்தை குறிக்கிறது.




