நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் உள்ள மேல்கலிங்கம்பட்டி என்ற கிராமத்திற்கு அருகில் உள்ளது எட்டுக்கை அம்மன் என்ற இக்கோயில். எட்டுக்கை அம்மன் என்ற தெய்வத்தின் மற்றொரு பெயர் கொல்லிப்பாவை. கொல்லிப்பாவை என்பதன் பொருள் தீய சக்தியில் இருந்து பாதுகாப்பவர் . ஏவல், பில்லி சூனியம், கண் திருஷ்டி ,மந்திர கட்டுகள் போன்ற சகலபிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் கோயிலாக இது கருதப்படுகிறது. எட்டு கைகளை கொண்ட அம்மன் என்பதால் எட்டுக்கை அம்மன் என்று அழைக்கப்படுகிறார். அமாவாசை மற்றும் பௌர்ணமி நாட்களில் சிறப்பு பூஜை நடைபெறும். சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் கிராம மக்களால் மிகவும் சக்தி வாய்ந்த அம்மன் கோயிலாக இது கருதப்படுகிறது. மலைவாழ் மக்களின் குலதெய்வமாக எட்டுகை அம்மன் என்ற கோயில் உள்ளது. கோவிலை சுற்றிலும் அடர்ந்த மரங்களுடன் கூடிய இயற்கை காட்சிகள் மற்றும் அமைதியான சூழல் உள்ளது. தமிழகத்தில் பொதுவாக மந்திர கட்டுகளை உடைக்கும் தெய்வமாக கருப்பண்ணசாமி போற்றப்படுகிறார்.. அதேபோன்று கொல்லிப்பாவை என்ற எட்டுகை அம்மனும் மந்திர கட்டுகளை உடைக்கும் தெய்வமாக போற்றப்படுகிறார். எட்டுகை அம்மன் கோவிலுக்கு அருகில் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற மாசிலா அருவி உள்ளது.




