வீட்டிலிருக்கும் வெறும் மூன்று பொருட்களால் உடல் சூட்டை தணிக்கலாம் என தெரியுமா..??

Oplus_131072

 

மாறி வரும் காலநிலை மாற்றத்தால் நம்மில் பலருக்கு உடலில் அதிக உஷ;ணம் ஏற்படுகிறது. இது முக்கியமாக அதிக நேரம் வெளியில் பயணங்கள் மேற்கொள்வோருக்கும், அதிக நேரம் நாற்காலி, சோபா மீது உட்கார்ந்திருப்பதாலும் ஏற்படுகிறது.

இதனால் நம் தலைமுடி முதல் கால் வரை உள்ள அனைத்தும் ஆரோக்கியத்தை இழக்கிறது.

இதன் விளைவாக ஏற்படும் நோய்கள் முக்கியமாக முகப்பரு, தோல் வியாதிகள், தலைமுடி உதிர்தல், வயிற்றுவலி, உடல்எடை குறைதல் போன்றன நிகழ்கின்றன. இவற்றிற்கு நாம் வீட்டிலிருந்தே தீர்வு காண முடியும்.

தேவையான பொருள்கள்
01. நல்லெண்ணெய்
02. பூண்டு
03. மிளகு

செய்முறை
நல்லெண்ணையை ஒரு கரண்டியில் தேவையான அளவு எடுத்து கொண்டு அதனை மிதமான சூட்டில் சூடுபடுத்தவும், எண்ணெய் காய்ந்ததும் அதில் மிளகு மற்றும் தோல் உரிக்காத பூண்டை போட்டு சில நிமிடத்தில் சூடானதும் அடுப்பில் இருந்து இறக்கி, சூடு ஆறியதும் எண்ணையை, காலின் (இருகால்) பெரு விரல் நகத்தில் மட்டும் பூசி விட வேண்டும்.

2 நிமிடங்கள் கழித்து உடனே காலை கழுவி விட வேண்டும், இதனை செய்யும் போதே உங்கள் உடம்பு குளிர்ச்சி அடைவதை உணர முடியும், 2 நிமிடத்திற்கு மேல் இதனை விரலில் வைத்திருக்க கூடாது, சளி, ஜுரம் உள்ளவர்கள் இதனை முயற்சி செய்ய வேண்டாம், மிகுந்த மன அழுத்தம், உஷ்ண உடம்பு உள்ளவர்கள் இதனை கட்டாயம் செய்து பயன் பெறுங்கள்.

 

Read Previous

அமானுஷ்ய சக்தி கொண்ட பிரசித்தி பெற்ற கொல்லிமலை எட்டுக்கை அம்மன் கோவில்

Read Next

கெட்ட கொழுப்புகளை கரைத்து விரைவில் உடல் எடை குறைய தினமும் இதில் ஒரு டம்ளர் குடிங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular