அன்றும்..!! இன்றும்..!! அருமையான கருத்துள்ள பதிவு..!!

Oplus_131072

1). இறைச்சியை நெருப்பில் சுட்டுச் சாப்பிட்டுக் கொண்டிருந்தோம். சுகாதாரமில்லாத முறை என்றான் வெள்ளையன்.

நாங்களும் மாறினோம்.

இன்று அதையே

BARBEQUE என்று ,
KFC , MACDONALD இல் விக்கிறான்.

2). உப்பு + கரியில், ஆலங்குச்சி, வேப்பங்குச்சியில் பல் தேய்த்தோம்.
பற்பசையை அறிமுகப் படுத்தினான்.

இதில்இப்போது உங்கள் TOOTHPASTE இல்
SALT + CHARCOAL இருக்கா ?
என்று கேட்கிறான். TOOTH BRUSH இல் NEEM
வந்திருக்கு.

3). மண்பானை, மண்சட்டியில் சமைத்தோம்.

உலோகப் பாத்திரங்களை அறிமுகப் படுத்தினான்.

இன்று மண்சட்டியில் சமைத்த உணவை விசேட விலையில் STAR HOTEL களில் விக்கிறான் .

4). நாட்டு மாட்டின் பாலை பயன்படுத்தினோம்.

ஜெர்சி மாட்டை அறிமுகப் படுத்தினான்.

இன்று அவனே ஆசியாவிலிருந்து நாட்டு மாடுகளின் SPERM(விந்தணு) ஏற்றுமதி செய்கிறான்.

5). இளநீர் , பதனீரைப் பருகினோம்.

COKE, PEPSI ஐ கொண்டு வந்தான்.

இன்று அவனே இளநீரைத் தகரத்தில் அடைத்து விற்கிறான்.

6). CORPORATE COMPANY களின் வியாபார உத்தியான விளம்பரப் பேச்சைக்கேட்டுத் தொண்மைகளைத் தொலைத்த
” முட்டாள் ”
இனம் நாமாகத்தானிருப்போம்.

7). நாகரீகப் போர்வையில் நாமும் இதே தவறைத்தான் செய்கிறோம் என்பதே கசப்பான உண்மை.

8). வெற்றிலைக் கொடி படற அகத்தியை நட்டோம்,

அகத்திக் கீரை தின்ன ஆடு வளர்த்தோம்,

ஆடு போட்ட புலுக்கையை அள்ளி காடு வளர்த்தோம்,

காட்டுக்குள்ளே புழுப் புரட்டக் கோழியை விட்டோம்,

வளர்த்ததெல்லாம் விற்காம அய்யனார் கோவிலுக்குச் சில நேர்ந்துவிட்டோம்,

நேர்ந்துவிட்ட அதுகளை வெட்ட திருவிழா வச்சோம்,

திருவிழாப் பேரைச் சொல்லி உறவை அழைச்சோம்,

உறவுகளோடு உட்கார்ந்து அவனுக்கு அவளெனப் பேசி முடிச்சோம்.

பேசி முடிச்சதுக்கு ஆதாரமா எங்க தோட்டத்து வெற்றிலையோடு பாக்கையும் வச்சோம்.

இப்படியே வஞ்சகம், சூது இல்லாமல் சுழன்ற எங்கள் வாழ்க்கைமுறை, இப்போ நஞ்சும், சூதுமாக நகருக்குள் நடக்கிறது.

நம் பாரம்பரியத்தை தொலைத்துஅடிமுட்டாளாகி நாகரீக கோமாளி
ஆகி விட்டோம்…

Read Previous

அமெரிக்காவின் 50% வரிவிதிப்பு.. பெப்சி, கோக்கை புறக்கணிக்கும் இந்தியர்கள்..!!

Read Next

2-வது மற்றும் 3-வது மனைவியை கொடூரமாக கொன்ற கணவன்..!! போலீஸ் விசாரணை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular