பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜாவுக்கு விதிக்கப்பட்டிருந்த 6 மாத சிறை தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம் இன்று ரத்து செய்துள்ளது.
பெரியார் சிலை உடைப்பு தொடர்பாக பேசியது மற்றும் திமுக எம்.பி. கனிமொழி குறித்து அவதூறான கருத்துகளை தெரிவித்தது தொடர்பான வழக்குகளில், சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புகளை எதிர்த்து ஹெச்.ராஜா மேல்முறையீடு செய்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், ஹெச்.ராஜாவின் பதிவுகளால் சமூகத்தில் அச்சுறுத்தல் அல்லது பாதிப்பு ஏற்பட்டதாக நிரூபிக்கும் போதிய ஆதாரங்கள் இல்லை எனக் குறிப்பிட்டு, அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தீர்ப்பு அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.




