இந்த நவீன காலகட்டத்தில் ஆரோக்கியம் அனைவரிடமும் இருக்கிறதா என்றால் ஒரு கேள்வி குறித்தான். ஏனென்றால், ஆரோக்கியம் என்பது மிகவும் மனிதனுக்கு அவசியமான ஒன்று. ஆனால், இந்த நவீன காலகட்டத்தில் ஆரோக்கியம் அனைவரிடமும் குறைவாகத்தான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வகையில் அவசியம் கடைபிடிக்க வேண்டிய ஆரோக்கிய குறிப்புகளை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
பசிக்கும்போது மட்டும் சாப்பிடுங்கள். தாகம் எடுத்தால் தண்ணீர் குடியுங்கள். குளிர்பானங்களை முற்றிலுமாக தவிர்த்து விடுங்கள். அதுமட்டுமின்றி, ஒரு நாளைக்கு பத்து நிமிடமாவது தனிமையில் அமைதியாக இருந்து சிந்தியுங்கள். இதனால் உங்களின் ஆற்றல் வெளிப்பட்டு அவ்வப்போது மனதுக்குள் சிறிது நேரம் பிரார்த்தனை செய்வதால் உடல் ஆரோக்கியம் மற்றும் உடல் அமைதி கிடைக்கும்.
தரையில் அமர்ந்து சாப்பிடுவது மிகவும் நல்லது. குறிப்பாக கைவிரல்களால் சாப்பிடுங்கள் அதாவது ஸ்பூன் போன்றவற்றை பயன்படுத்தாமல் தன் கையே தனக்குதவி என்ற பழமொழிக்கு ஏற்றவாறு தன் கையை பயன்படுத்தி சாப்பிட்டால் உடல் ஆரோக்கியம் கிடைக்கும் என்று சொன்னால் நம்புவீர்களா..? ஆம் நாம் கை விரல்களுக்கும் ஜீரணத்திற்கும் சம்பந்தம் உண்டு அதாவது நம் கைவிரல்களால் சாப்பிடும் போது ஜீரணத்திற்கு விரல்களுக்கும் தொடர்பு உள்ளதால் இது ஆரோக்கியத்தை மேம்படுத்தும். மேலும் அதிகமான காய்கறிகள் மற்றும் பழங்களை உடலுக்கு தேவையான அளவு ஒவ்வொரு நாளும் எடுத்துக் கொள்வது மிகவும் நல்லது. அதுமட்டுமின்றி பதப்படுத்தப்பட்ட உணவுகளை முற்றிலுமாக நாம் தவிர்க்க வேண்டும். குறைந்தது 7 மணி நேரமாவது தூங்க வேண்டும். தூக்கம் என்பது மனிதனுக்கு மிகவும் அவசியமான ஒன்று. அந்த வகையில் இரவு 10 மணிக்குள் தூங்கி காலையில் 5 மணிக்கு எழுவது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. நம் உடலுக்கு தேவையான அளவு தண்ணீர் அருந்துவது மிக மிக முக்கியமான ஒன்று பலரும் தண்ணீர் அருந்துவதை மறந்து வேலை என்று ஓடிக் கொண்டிருக்கின்றனர் இதனால் உடலுக்கு பெரிய அளவில் பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்பு உண்டு எனவே உடலுக்கு தேவையான அளவு தண்ணீர் அருந்துவதை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும்.




