கோவக்காய் பொரியல் இப்படி செஞ்சு கொடுத்து பாருங்க வேண்டாம்னு சொல்லாம எல்லாரும் சாப்பிடுவாங்க
செய்முறை:
கோவக்காயை நன்கு கழுவி நீள்வாக்கில் வெட்டிக் கொள்ளவும்.ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு, கடலைப்பருப்பு, கருவேப்பிலை போட்டு தாளிக்கவும்.
கோவக்காய் சேர்த்து மஞ்சள் தூள் அரை தேக்கரண்டி கரம் மசாலா ஒரு தேக்கரண்டிஉப்பு தேவையான அளவு சேர்த்து தண்ணீர் தெளித்து காயை வேக விடவும்.
வேர்க்கடலை 1/4 கப்
காய்ந்த மிளகாய் இரண்டு
ஒரு கடாயில் வேர்க்கடலை மற்றும் காய்ந்த மிளகாயை நன்கு வறுத்து பொடித்துக் கொள்ளவும்.
காய் வெந்தவுடன் நிலக்கடலை பொடியும் தேங்காய் துருவலும் சேர்த்து கிளறவும்மிகவும் சுவையான கோவக்காய் பொரியல் தயார்.




