ஆடி மாதத்தில் செய்யப்படும் செட்டிநாடு ஸ்பெஷல் பால் கொழுக்கட்டை – முழு செய்முறை..!!

 

ஆடி மாதம் அம்மனுக்கு மிகவும் புனிதமானதாக கருதப்படும் காலமாகும். குறிப்பாக ஆடி வெள்ளி மற்றும் செவ்வாய் நாட்களில் பெண்கள் விரதம் இருந்து அம்மனை வழிபடுவது வழக்கம். இந்த நாட்களில் அம்மனுக்கு குளிர்ச்சியான நெய்வேத்யங்கள், கூல், பாயசம் போன்றவற்றை சமர்ப்பிப்பதும் சிறப்பு.

அப்படிப்பட்ட நெய்வேத்யங்களில் முக்கியமானது பால் கொழுக்கட்டை. இதை வீட்டிலேயே எளிமையாக செய்வது எப்படி என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:

மாவுக்கு:

  • கொழுக்கட்டை அல்லது இடியாப்ப மாவு – 1 ¾ கப்
  • உப்பு – ½ டீஸ்பூன்
  • சுடுநீர் – தேவையான அளவு

தேங்காய் பாலுக்கு:

  • துருவிய தேங்காய் – 2 கப்
  • ஏலக்காய் – 3
  • வெதுவெதுப்பான நீர் – தேவையான அளவு

வெல்ல நீருக்கு:

  • பொடித்த வெல்லம் – 1 ¼ கப்
  • தண்ணீர் – ¼ கப்

செய்முறை:

முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் கொதிக்க வைக்கவும். மற்றொரு பாத்திரத்தில் மாவுடன் உப்பு சேர்த்து கலக்கவும். பின்னர் சுடுநீரை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கரண்டியால் கிளறி, மென்மையான மாவாக பிசைந்து கொள்ளவும்.

பிசைந்த மாவை சிறிய உருண்டைகளாகவோ அல்லது நீளமான குச்சிகளாகவோ உருட்டி வைத்துக் கொள்ளவும்.

அடுத்து தேங்காய் பாலை தயாரிக்க, துருவிய தேங்காயுடன் ஏலக்காய் மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து அரைத்து முதல் பாலை எடுக்கவும். மீதமுள்ள சக்கையை மீண்டும் தண்ணீர் சேர்த்து அரைத்து இரண்டாவது பாலும் எடுத்து வைத்துக் கொள்ளவும்.

பின்னர் ஒரு பாத்திரத்தில் வெல்லம் மற்றும் தண்ணீர் சேர்த்து கரைத்து, வெல்ல நீரை தயார் செய்து கொள்ளவும்.

அடுத்து ஒரு அடிகனமான பாத்திரத்தில் தண்ணீர் கொதிக்க வைத்து, அதில் உருட்டிய கொழுக்கட்டைகளை போட்டு மிதமான தீயில் சில நிமிடங்கள் வேகவிடவும். கொழுக்கட்டை வெந்ததும் அதில் வெல்ல நீரை சேர்த்து மேலும் கொதிக்க விடவும்.

இறுதியாக தேங்காய் பாலை சேர்த்து மெதுவாக கிளறி அடுப்பை அணைக்கவும். மேலே சிறிதளவு துருவிய தேங்காய் தூவி பரிமாறலாம்.

இப்போது நெய்வேத்யமாக சமர்ப்பிக்க சுவையான பால் கொழுக்கட்டை தயாராகிவிட்டது.

Read Previous

தமிழகத்தில் இன்று பல மாவட்டங்களில் மின்தடை – மின்வாரியம் அறிவிப்பு..!!

Read Next

தினமும் புதினா சாப்பிட்டால் என்னென்ன நன்மைகள்?.. தெரிந்து கொள்ளுங்கள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular