மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இன்று திட்டமிட்ட மின்தடை அமல்படுத்தப்பட உள்ளது.
அதன்படி, கோவை (சூலூர், காந்திபுரம்), சென்னை (முல்லை நகர்), கடலூர், தர்மபுரி, திண்டுக்கல், கரூர், தஞ்சாவூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், பெரம்பலூர், புதுக்கோட்டை, சேலம், தேனி, திருப்பத்தூர், திருச்சி, திருவாரூர், விழுப்புரம், உடுமலைப்பேட்டை மற்றும் வேலூர் மாவட்டங்களின் முக்கியப் பகுதிகள் மற்றும் அவற்றைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை ஏற்படும் என மின்வாரியம் தெரிவித்துள்ளது.
பராமரிப்புப் பணிகள் நிறைவடைந்தவுடன் மின் விநியோகம் மீண்டும் வழக்கம்போல் வழங்கப்படும் என்றும் பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.




